E සි

பெண்கள் மற்றும் சிறுமிகளிடையேகாணப்படும் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் வன்முறை தொடர்பாக

தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் வன்முறையானது சுய காயப்படுத்தும் எண்ணங்கள் மற்றும் நடத்தைகளின் ஒரு தோற்றமாகும், இவை சுய காயப்படுத்தும் தன்மையை கொண்டு இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் அல்லது இறப்பைக் கூட ஏற்படுத்தலாம். உலகலாவிய ரீதியிலுள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளைத் தங்களை சுய காயப்படுத்திக் கொள்ளும் எண்ணத்திலிருந்து பாதுகாப்பதற்கு அல்லது தடுப்பதற்கு போதுமான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. பெண்களிடையே பாலினக் கூச்சங்களை தெரியப்படுத்துவதற்கும் தடுப்பதற்குமான இலக்குகளையுடைய ஆராய்ச்சிகளுக்கான அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக பெண்களின் சுயகாயப்படுத்தலானது திடீர் மனக்கிளர்ச்சி காரணமாக அல்லது அடுத்தவரைக் கையாள்வதற்காக அல்லது அடுத்தவருடைய கவனத்தை ஈர்ப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தீவிரமற்ற வெளிப்பாடாகச் சித்தரிக்கப்படுகிறது. பெண்மையில் ஏற்படும் உள்ளார்ந்த குறைபாடுகள் காரணமாகத்தான் பெண்கள் "மென்மையானவர்களாக" இருக்கிறார்கள் அல்லது "கோபக்காரர்களாக" இருக்கிறார்கள் எனப் பொதுமக்கள் பெரும்பாலும் கருதுகிறார்கள்.

பெண்களினுள் தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் வன்முறை எவ்வாறு வன்முறைத் தூண்டுகின்றது, ஏன் தூண்டப்படுகின்றது இதனால் பெண்கள் எதிர் நோக்கும் விளைவுகள் என்ன என்பவற்றைப் பற்றிய மிகச் சிறியளவான ஆய்வுகளே உலகளாவிய ரீதியில் குறிப்பாகத் தெற்காசியாவினில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை விடக் குறைவான அளவிலான ஆராய்ச்சிகளே அவை இடம்பெறும் கலாச்சாரங்களைப் பற்றி ஆராய்வதற்கோ அல்லது பெண்ணின் வாழ்க்கைச் சூழ்நிலைகள் மற்றும் அவர்களின் வாழ்க்கையின் தனிப்பட்ட அம்சங்களை அங்கீகரிப்பதற்கோ நிகழ்த்தப்பட்டுள்ளன.

உடல், மன மற்றும் ஆரோக்கிய விளைவுகளை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாகப் பாலினம் இருக்கிறது. உடல், மன மற்றும் ஆரோக்கிய விளைவுகளைத் தனிப்பட்ட மற்றும் சமூக குணாதிசயங்களுடன் தொடர்பு கொள்ளல், சுகாதார நடவடிக்கைகளில் செல்வாக்குச் செலுத்தல் மற்றும் சுகாதார அமைப்புகள் சுகாதாரத் தேவை உள்ளவர்களை எவ்வாறு பிரதிபலிக்கிறது என்பவற்றின் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் வடிவமைக்கலாம். பாலினம் தொடர்பான சமூகக் கட்டுமானம் தனிப்பட்ட சுகாதாரப் பாதைகளைப் பாதிக்கலாம். பெண்களின் வாழ்க்கையில் அடிக்கடி செயற்படும் காரணிகள் மற்றும் தொடர்புகளைக் கருத்திற்கொள்ள பாலின உணர்வுகள் தொடர்பான விழிப்புணர்வுகள் பற்றிய ஆராய்ச்சிகள் நீண்ட காலமாகத் தாமதமாக உள்ளதனால், இது பெண்களின் பாதிப்பு மற்றும் சுய காயப்படுத்தல் மற்றும் தற்கொலை செய்தல் என்றவற்றில் செல்வாக்குச் செலுத்துகிறது. வலியுடன் கூடிய பயணப் பாதையினை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சிகள் பெண்களின் பாத்திரங்களைப் பாலினம் மூலம் வடிவமைத்தல், நடத்தைகள், பொறுப்புக்கள், எதிர்பார்ப்புகள், கவனிப்புகள் மற்றும் சுய காயப்படுத்தல் தொடர்பான வளங்கள் மற்றும் உதவிகளுக்கான உரிமைகளை வழங்குதல் போன்ற பல விடயங்களை ஆராய்ச்சி செய்கின்றன. சுய காயப்படுத்தல் எண்ணங்கள் முதல் தற்கொலையால் ஏற்படும் மரணங்கள் வரையிலான முழு அளவிலான அனுபவங்களையும் இந்த ஆராய்ச்சி உள்ளடக்கியுள்ளது.

தனக்குத் தானே ஏற்படுத்திக்கொள்ளும் வன்முறை தொடர்பான தகவல்கள்

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகள்:

  • உலகளாவிய தற்கொலைகளில் 79%, அத்துடன் அதிகரிக்கும் உயிருக்கு ஆபத்தேற்படுத்தாத சுய காயப்படுத்தல் நிகழ்வுகள்.

தென்கிழக்கு ஆசியா:

  • சுய காயப்படுத்தல் நிகழ்வுகளில் அதிகரிப்பு ஏற்படுகிறது
  • பெண்கள் மத்தியில் விதிவிலக்காக சுய காயப்படுத்தல் அதிகளவில் இடம்பெறுகின்றது
  • இளம் பருவப் பெண்களிடையே (100,000 மக்களில் 28 பேருக்கு ) இளம் பருவ ஆண்களை விட (100,000 மக்களில் 21 பேருக்கு) அதிகளவான தற்கொலை விகிதங்கள் காணப்படல்
  • கர்ப்பிணிகள், மகப்பேற்றுக்குப் பின் பெண்கள் மற்றும் சிறுமிகளில் அதிக விகிதத்தில் ஏற்படும் தடுக்கப்படக்கூடிய இறப்புகளில் தற்கொலைகளின் எண்ணிக்கைகளை இனங்காணல்

இந்தியா:

  • உலகில் ஏற்படுகின்ற பெண்களின் தற்கொலைகளில் 40% ஆகும்
  • அவர்களின் முதலாவது தேசிய தற்கொலைத் தடுப்பு உத்தியை 2022 இல் அறிமுகப்படுத்தினார்கள், எனினும் பாலின உணர்வுகள் தொடர்பான தடுப்புப் பற்றிய வழிகாட்டுதல் இல்லை

இந்தியா:

  • உலகில் ஏற்படுகின்ற பெண்களின் தற்கொலைகளில் 40% ஆகும்
  • அவர்களின் முதலாவது தேசிய தற்கொலைத் தடுப்பு உத்தியை 2022 இல் அறிமுகப்படுத்தினார்கள், எனினும் பாலின உணர்வுகள் தொடர்பான தடுப்புப் பற்றிய வழிகாட்டுதல் இல்லை

தென்கிழக்கு ஆசியா:

  • சுய காயப்படுத்தல் நிகழ்வுகளில் அதிகரிப்பு ஏற்படுகிறது
  • பெண்கள் மத்தியில் விதிவிலக்காக சுய காயப்படுத்தல் அதிகளவில் இடம்பெறுகின்றது
  • இளம் பருவப் பெண்களிடையே (100,000 மக்களில் 28 பேருக்கு ) இளம் பருவ ஆண்களை விட (100,000 மக்களில் 21 பேருக்கு) அதிகளவான தற்கொலை விகிதங்கள் காணப்படல்
  • கர்ப்பிணிகள், மகப்பேற்றுக்குப் பின் பெண்கள் மற்றும் சிறுமிகளில் அதிக விகிதத்தில் ஏற்படும் தடுக்கப்படக்கூடிய இறப்புகளில் தற்கொலைகளின் எண்ணிக்கைகளை இனங்காணல்

இலங்கை:

  • நான்கு பெண்களில் ஒருவர் (15-49 வயது) கடந்த காலத்தில் தங்களைத் தாங்களே காயப்படுத்த நினைத்ததாகவோ அல்லது உண்மையில் செய்ததாகவோ தெரிவிக்கின்றனர்
  • தற்கொலையால் ஏற்படும் ஒவ்வொரு மரணத்திற்கும் 13-18 மரணத்தை ஏற்படுத்தாத நிகழ்வுகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது
  • முக்கியமாக பூச்சிக்கொல்லிகள் நஞ்சாவதனால் ஏற்படுத்தப்படும் தற்கொலைகளைக் குறைப்பதில் முன்னேற்றம் அடைந்துள்ளது, ஆனால் குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்படுத்தும் முறைகள் மற்றும் இயக்குவிப்புகளுக்குத் தீர்வு காண்பதில் குறைவான முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.

பின்னணி மற்றும் நடைமுறைகள் பற்றிய சுருக்கக் குறிப்பைத் தரவிறக்கம் செய்ய

இலங்கையில் வாழும் மூன்று பெண்களின் உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்ட வலியுடன் கூடிய பயணப் பாதையின் கதைகள்: பெண்கள் மற்றும் இளம் பெண் பிள்ளைகளின் சுய-தீங்குகளைத் தடுப்பதற்கான ஒரு பாதை எனும் திரைப்படமானது பெண்களின் தினசரி வாழ்க்கையில் வலியுடன் கூடிய பயணப் பாதை வெளிப்படுத்தப்படும் வழிமுறைகள் மற்றும் இடங்களைப் பற்றி அறிந்து கொள்ள எமக்கு உதவுகிறது. இது பார்வையாளர்கள் தங்களுடைய சமூக வலை அமைப்பினுள் இவ்வாறான தோரணைகளை அடையாளங்காணவும் அவை எடுக்கக்கூடிய வடிவங்களை இனங்கண்டு கொள்வதிலும் உதவி செய்கின்றது.

12 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆங்கிலம் தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் இத்திரைப்படத்தைப் பார்வையிடலாம்.

Watch the full film now

அவர்களின் கதைகளைக் கற்றுக்கொள்ளுங்கள்