வலியுடன் கூடிய பயணப் பாதையின் ஸ்தாபகர் மற்றும் முதன்மை ஆய்வாளர்
டாக்டர் அலெக்சிஸ் பால்ஃப்ரேமேன் ஒரு தற்கொலை நிபுணர் மற்றும் உலகளாவிய சுகாதாரம், சர்வதேச மேம்பாடு மற்றும் கல்வித்துறையில் 16+ வருட அனுபவமுள்ள ஒரு பல்துறை ஆராய்ச்சியாளராவார். அவர் தெற்கு (கிழக்கு) மற்றும் மத்திய ஆசியா, துணை-சஹாரா ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய பகுதிகளில் பணியாற்றினார். அவரது பணி பொது சுகாதாரம் மற்றும் சமூக அறிவியல் அணுகுமுறைகளை ஒருங்கிணைத்து உலகளாவிய சுகாதார பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ளல் மற்றும் நம்பிக்கைக்குரிய தீர்வுகளை ஆராய்தல் என்பவற்றை உள்ளடக்கியது. அவர் 2009ம் ஆண்டு முதல் பெண்கள் மற்றும் சிறுமிகளிடையே நிலவும் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் வன்முறை மீதான ஆராய்ச்சிக்குத் தலைமை தாங்கி வருகின்றார்.